எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 01/12/2022
கோயம்புத்தூர் மாவட்ட துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் 01.12.2022 அன்று உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இப்பேரணியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) மரு.சந்திரா, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.அருணா, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்ட அலுவலர் டி.கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டனர். (PDF 228KB)