Close

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு முழுஉருவச்சிலை அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 18/11/2022
NOV 18C - Honble

வ.உ.சி பூங்காவில் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு முழுஉருவச்சிலை அமையவுள்ள இடத்தினை 18.11.2022 அன்று மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனாஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிசெல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், மண்டல குழுத்தலைவர் மீனாலோகு, வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழுத்தலைவர் முபசீரா, உதவி ஆணையர் மகேஸ் கனகராஜ், மாமன்ற உறுப்பினர் சுமா, பொதுப்பணித்துறை (கட்டிட கட்டுமான மற்றும் பராமரிப்பு கோட்டம்) செயற்பொறியாளர் செல்வராஜூ, உதவி செயற்பொறியாளர் ரமேஷ்குமார், உதவி பொறியாளர் மோகனகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.(PDF 40KB)

NOV 18A - Honble Inform