குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான கோயம்புத்தூர் மண்டல அளவிலான பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
             வெளியிடப்பட்ட தேதி : 21/03/2023          
          
                       
                        கோயம்புத்தூர் மாவட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான கோயம்புத்தூர் மண்டல அளவிலான பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு நீதித்துறை பயிலக துணை இயக்குநர் எஸ்.பி.ரிஷிரோஷன், தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் டி.தமிழரசி, இணை ஆணையர் லீலாவதி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துணை இயக்குநர் எம்.கலைமதி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார், தமிழ்நாடு கூட்டணி நிறுவன உறுப்பினர் பி.பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். (PDF 85KB)


 
                        
                         
                            