சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 15/11/2022
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 15.11.2022 அன்று சாலைபாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் இ.கா.ப., மாநகர காவல் துணை ஆணையர் திரு.அசோக்குமார், மாநகர காவல் துணை ஆணையர் திரு.மதிவாணன் , உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.சௌமியா ஆனந்த் இ.ஆ.ப, பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.பிரியங்கா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா,வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 33KB)