Close

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 29/11/2022
Public Enterprises Committee Meeting

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 29.11.2022 அன்று அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் திரு.எஸ்.ஆர்.இராஜா அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ச.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), திரு.ஆ.அருண்மொழிதேவன் (புவனகிரி), திரு.ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), திரு.A.K.செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), திரு.R.D.சேகர் (பெரம்பூர்), திருமதி.ஆ.தமிழரசி, (மானாமதுரை), திரு.S.S.பாலாஜி (திருப்போரூர்) முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., சட்டப்பேரவை செயலர் முனைவர்.கே.சீனிவாசன், இணைச் செயலாளர் திரு.சி.பாண்டியன், செயல் இயக்குனர் (சிப்காட்) /டைடல் பார்க் மேலாண் இயக்குனர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ..ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, துணை ஆணையர் (கலால்) சுபநந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) கமலகண்ணன், தமிழ்நாடு போக்குவரத்து கழக(கோவை) பொதுமேலாளர் எஸ்.ஸ்ரீதரன், துணை மேலாளர் ஜெய்சங்கர், ஆகியோர் உள்ளனர். (PDF 64KB)