தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் பாரதியார் பல்கலைக்கழக செயல்பாட்டு மையம் திறந்து வைக்கப்பட்டது.
வெளியிடப்பட்ட தேதி : 03/03/2026
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதிஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் பாரதியார் பல்கலைக்கழக செயல்பாட்டு மையத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததையொட்டி, கோயம்புத்தூர் மாவட்டம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று (03.03.2026) நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி மையத்தின் செயல்பாட்டினை துவங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., பாரதியார் பல்கலைக்கழக நான் முதல்வன் செயல்பாட்டு மைய அலுவலர் திருமதி.விமலா உட்பட பலர் கலந்துகொண்டனர். (PDF 235KB)