தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டு, இரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 21/11/2022
தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 21.11.2022 அன்று மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மற்றும் மாவட்ட குருதிபரிமாற்ற குழுமம் சார்பாக பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை 53 இரத்த தான முகாம் அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, இணை இயக்குநர்(மருத்துவம் மற்றும் ஊரககப்பணிகள்) மரு.சந்திரா, எய்ட்ஸ் கட்டுபாடு அலுவலர்,துணை இயக்குநர் சுககாதாரப்பணிகள் மரு.அருணா, மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் மரு.மங்கையர்கரசி, மாவட்ட திட்ட மேலாளர் கோபாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 26KB)