பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்ததையடுத்து, பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனாஆனந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் திரு.இரா.வெற்றிசெல்வன், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக்கேஸ்வரி, ஐயூடிபி காலனி, மாமன்ற உறுப்பினர் சிவசக்தி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர்கள் விஜயமோகன், ராஜேந்திரன், கருப்பசாமி, சுதர்சன், உதவி பொறியாளர் த.மகேஷ்சங்கர், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 53KB)