மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 28/12/2022
கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் கல்பனா திருமண மண்டபத்தில் 28.12.2022 அன்று தமிழ்நாடு அரசு கைத்தறி துறை மற்றும் மத்திய அரசு ஜவுளி துறை கைத்தறி வளர்ச்சி ஆணையம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் டெக்ஸ்டைல் கமிட்டி வேணுகோபால், நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் கார்த்திகேயன், தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மேலாளர் இரத்தினவேல், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் குமரேசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை, உதவி இயக்குநர், செ.சிவக்குமார் பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அப்துல் பார்க், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.(PDF 45KB)