Close

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணையினை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 27/11/2022
Pollachi Job Fair

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் பொள்ளாச்சி நாச்சிமுத்து பலவகை தொழில்நுட்ப கல்லுரியில் 27.11.2022 அன்று நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் கலந்துகொண்டு, தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணையினை வழங்கினார். இம்முகாமில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.பிரியங்கா இ.ஆ.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.சௌமியா ஆனந்த் இ.ஆ.ப., தொழிலக பாதுகாப்பு துறை இயக்குநர் திரு.செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். (PDF 29KB)

Pollachi Job Fair Pollachi Job Fair
Pollachi Job Fair