Close

ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில்கள் குறித்த பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 25/09/2026

மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில்களை கண்டறிவதற்காக 06.10.2025 அன்று ஐந்து நபர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவால் பரிசீலிக்கப்பட்ட 34,971 திருக்கோயில்கள் தொடர்பான விவரங்கள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை 25.09.2026க்குள் தெரிவிக்க அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, திருக்கோயில்கள் தொடர்பான விவரங்களில் ஏதேனும் விடுபாடுகள் அல்லது கருத்துகள் இருப்பின், அவற்றை 10.10.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் குழுவிற்கு தபால் மூலமாகவோ அல்லது இந்து சமய அறநிலையத்துறை இணையதளம் வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

இத்தகவலை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திரு. பெ. ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 225KB)