• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 24/01/2023

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டங்கில் 24.01.2023 அன்று கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் திரு.தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப , கூட்டுறவு சங்க தேர்தல் செயலாளர் / கூடுதல் பதிவாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்கத்தின் இணை பதிவாளர் பார்த்திபன், கூட்டுறவு சங்க பதிவாளர் கண்ணப்பராஜா, மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் இந்துமதி, துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபன மேலாண்மை இயக்குநர் சிவக்குமார், உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.சௌமியா ஆனந்த் இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 48KB)