கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாநில பொது ஆய்வுப் பணி (SCRM) கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
PR.NO.31 - 003

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இன்று (10-10-2026), தேசிய நலக் குழும இயக்குநர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் மாநில பொது ஆய்வுப் பணி (SCRM) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 08.10.2026 மற்றும் 09.10.2026 ஆகிய இரண்டு நாட்களில் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் முக்கிய கண்டறிதல்கள், தேவைகள் மற்றும் பரிந்துரைகள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. மருத்துவச் சேவைகளின் தரம், மருந்து இருப்பு, அவசர சிகிச்சை வசதிகள், தாய்-சேய் நலப் பணிகள் மற்றும் தேசிய சுகாதார இயக்கத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தவும் பொதுமக்களுக்கு தரமான மருத்துவச் சேவைகளை வழங்கவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

PDF70KB

PR.NO.31 - 001

 

PR.NO.31 - 002

 

PR.NO.31 - 003