கோயம்புத்தூர் மாவட்டம் தேசிய நிலஅளவை தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 10/04/2023
தேசிய நிலஅளவை தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிலஅளவைகள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை 10.04.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், உதவி இயக்குநர், நில அளவைகள் துறை கோபாலகிருஷ்ணன், தொழில்நுட்ப மேலாளர் வே.முத்துராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 390KB)