கோயம்புத்தூர் மாவட்ட உழவர் சந்தைகளில் நவம்பர் 1, 2026 முதல் இயற்கை வேளாண் சந்தைகள் தொடக்கம்
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், நுகர்வோருக்கு நஞ்சில்லா காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கும் வகையிலும், தமிழக அரசால் அனைத்து உழவர் சந்தைகளிலும் இயற்கை வேளாண் சந்தைகள் 01.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் வாரந்தோறும் பின்வரும் நாட்களில் இயற்கை வேளாண் சந்தைகள் நடைபெறும்:
- ஞாயிற்றுக்கிழமை: பொள்ளாச்சி, சுந்தராபுரம், மேட்டுப்பாளையம், வடவள்ளி
- திங்கட்கிழமை: குறிச்சி, சூலூர்
- புதன்கிழமை: ஆர்.எஸ்.புரம்
- வெள்ளிக்கிழமை: சிங்காநல்லூர்
இச்சந்தைகள் அதிகாலை 4.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை செயல்படும். இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் சான்றளிக்கப்பட்ட விவசாயிகள் (Certified Organic Farmers), விதைச் சான்று மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை வழங்கும் Scope Certificate பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள விவசாயிகள் அருகிலுள்ள உழவர் சந்தைகளில் விண்ணப்பித்து அடையாள அட்டை பெற்று, தங்களது இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு:
- ஆர்.எஸ்.புரம்: 8667223785
- சிங்காநல்லூர் மற்றும் சூலூர்: 8610752985
- வடவள்ளி மற்றும் மேட்டுப்பாளையம்: 9843728231
- சுந்தராபுரம், பொள்ளாச்சி மற்றும் குறிச்சி: 9095286634
இத்தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.