கோவையில் தேசிய கைத்தறி மகோத்சவம் தொடக்கம்
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2026
கோயம்புத்தூர், அவிநாசி சாலை, கோல்டு வின்ஸ், ராமலட்சுமி மகாலில் இன்று (13.10.2026) மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள், மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் நடைபெறும் மாபெரும் இந்திய தசரா தீபாவளி கைத்தறி மகோத்சவக் கண்காட்சி மற்றும் விற்பனையைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவுக் கருவிகள், ஓய்வூதியம் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 13.10.2026 முதல் 22.10.2026 வரை 10 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய கைத்தறி தயாரிப்புகள் 60 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.


