Close

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளக்கிணறு பகுதியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் புனரமைக்கும் பணியை ஆய்வு செய்தார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 03/12/2022
HONBLE RURAL DEVELLOPMENT

கோயம்புத்தூர் மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளக்கிணறு பகுதியில், தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் புனரமைக்கும் பணி 03.12.2022 அன்று மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள், மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின்போது அரசு முதன்மைச் செயலாளர் திருமதி. P.அமுதா இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் டாக்டர்.தாரேஸ் அகமது இ.ஆ.ப., ஊரக வாழ்வாதார இயக்க மேலாண் இயக்குநர் திருமதி.திவ்யதர்ஷினி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.அலர்மேல்மங்கை, இ.ஆ.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.சௌமியா ஆனந்த் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) கமலகண்ணன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மு.கோகிலா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் நா.கார்த்திக், வி.சி.ஆறுக்குட்டி கலந்துகொண்டனர். (PDF 88KB)

HONBLE RURAL DEVELLOPMENT