சிறு தானிய பயிர் ஊக்குவிக்கும் பிரச்சார வாகனங்களையும், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டவிளக்க சிறப்பு பிரச்சார வாகனத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 19/12/2022
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 19.12.2022 அன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் ஊக்குவிக்கும் வண்ணம் பிரச்சார வாகனங்களையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டவிளக்க சிறப்பு பிரச்சார வாகனத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் கா.முத்துலட்சுமி, வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) தமிழ்செல்வி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ஞானமுருகன், வேளாண்மை துணை இயக்குநர்கள் கிருஷ்ணவேனி, பெருமாள்சாமி, வேளாண்மை உதவி இயக்குநர்கள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 62KB)