Close

செப்டம்பர் 22, 2026 அன்று கோயம்புத்தூர் மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மெகா முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 19/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து 25 இடங்களில் சிறப்பு மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, 22.09.2026 அன்று கோயம்புத்தூர் மேற்கு ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், இலவச அறுவை சிகிச்சைக்கான பயனாளிகள் தேர்வு, உதவி உபகரணங்கள், கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடன் உதவி, பேருந்து அட்டை பதிவு மற்றும் பல்வேறு அரசுத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.

மேலும், ஆதார் பதிவு மற்றும் திருத்தம், குடும்ப அட்டையில் பெயர் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படும். கோயம்புத்தூர் மேற்கு வட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மட்டும் இம்முகாமில் கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 304KB)