Close

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமின் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2022
Job Fair Prelimnery Meeting

மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற 27.11.2022 அன்று பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. V செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.பிரியங்கா, இ.ஆ.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.சௌமியா ஆனந்த் இ.ஆ.ப., வேலைவாய்ப்புத்துறை இணை இயக்குநர்கள் அனிதா, ஞானசேகரன், துணை இயக்குநர் கருணாகரன், கொடிசியா தலைவர் திருஞானம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 51KB)

Job Fair Prelimnery Meeting