Close

‌தமிழ்நாடு சிறு தானிய மாநாடு மற்றும்‌ கருத்தரங்க நிகழ்ச்சியினை மாண்புமிகு உணவு மற்றும்‌ உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்‌

வெளியிடப்பட்ட தேதி : 07/01/2023
agri minister

கோயம்புத்தூர் மாவட்டம், நிர்மலா மகளிர் கல்லூரியில் 07.01.2023 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சிறு தானிய மாநாடு மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப, மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப, நிர்வாக இயக்குநர், தலைமை சித்த மருத்துவர், ஆரோக்கிய ஹெல்த்கேர் & திட்ட குழு உறுப்பினர் மரு.ஜி.சிவராமன், உலக சாதனைகள் யூனியன் (புளோரியா – USA) அதிகாரப்பூர்வ பதிவு மேலாளர் திரு,கிறிஸ்டோபர் டெய்லர், மண்டலகுழுத்தலைவர் மீனாலோகு, பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) சிவக்குமாரி, நிர்மலா கல்வி குழுமம் தலைவர் பேபியோலா மேரி, மாமன்ற உறுப்பினர் சுமா உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பலர் கலந்து கொண்டனர்.(PDF 44KB)