தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகை 08.11.2026 அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளைத் தவிர) தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த விரும்புவோர் 21.09.2026 முதல் 21.10.2026 வரை இ-சேவை மையங்கள் மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்கள், கட்டிட வரைபடம், சொத்து வரி ரசீது, உரிமையாளர்/கட்டிட உரிமையாளரின் சம்மதக் கடிதம், ரூ.700 உரிமக் கட்டணத்திற்கான E-Challan ரசீது, புகைப்படம், PAN, ஆதார் மற்றும் குடும்ப அட்டை/ஸ்மார்ட் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பட்டாசுக் கடைகள் 9 சதுர மீட்டர் முதல் 25 சதுர மீட்டர் பரப்பளவுக்குள் இருக்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் கடைகள் அமைக்கக் கூடாது. கடைகளுக்கு இடையே குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
மேலும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும். காலக்கெடுவிற்குப் பிறகு பெறப்படும் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாத விண்ணப்பங்கள் நிர்வாக காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.