நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 21/12/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 21.12.2022 அன்று மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2023-24ஆம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார். இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.சௌமியாஆனந்த், இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பி.ஆர்.ஜி.அருண்குமார்(கவுண்டம்பாளையம்), திரு.ஏ.கே.செல்வராஜ்(மேட்டுப்பாளையம்), திரு.வி.பி.கந்தாசமி (சூலூர்) திரு.டி.கே.அமுல்கந்தசாமி(வால்பாறை), மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திருமதி.கௌசல்யாதேவி, மாவட்ட மேலாளர் (தாட்கோ)செல்வன் கொண்டனர். (PDF 220KB)