நாக்பூர் தம்ம சக்கர பரிவர்தன விழாவில் பங்கேற்கும் பௌத்தர்களுக்கு ரூ.5,000 வரை பயண மானியம்
வெளியிடப்பட்ட தேதி : 18/09/2026
தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புவதற்கு, நபர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.5,000 வரை நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
2026ஆம் ஆண்டு பயணம் மேற்கொள்ள விரும்பும் பௌத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாகப் பெறலாம் அல்லது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 15.11.2026க்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறைக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.