நாக்பூர் தம்ம சக்கர விழா: தமிழக பௌத்தர்களுக்கு ரூ.5,000 வரை மானியம்
வெளியிடப்பட்ட தேதி : 21/08/2026
தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புவதற்காக, ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
2026ஆம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பௌத்தர்கள், விண்ணப்பப் படிவத்தை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 15.11.2026க்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.