Close

படைவீரர் கொடிநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடிநாள் நிதியினை வழங்கி தொடங்கிவைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 07/12/2022
FLAG DAY

படைவீரர் கொடிநாளை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 07.12.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கொடிநாள் நிதியினை வழங்கி தொடங்கிவைத்து, கடந்த ஆண்டில் சிறப்பாக கொடிநாள் நிதிவசூல் பணியினை மேற்கொண்ட மாவட்ட அலுவலர்களுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் தலைமைச் செயலாளரின் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர் சி.ரூபா சுப்புலட்சுமி, இந்திய கப்பல்படை ஐ.என்.எஸ். அக்ரனி கேப்டன் திரு.ஆகாஷ்ஜோசப், இந்திய தரைப்படை (110 பிரதேச ராணுவப்படையின்) லெப்டினன்ட் கர்னல் திரு.சத்யபிரசாத், தமிழ்நாடு பெண்கள் என்.சி.சி. காமண்டிங் ஆபீசர் திரு.ஜோஷி, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக நல அமைப்பாளர் திரு.மல்லிகா அர்ஜூனன் மற்றும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (PDF 53KB)

FLAG DAY