பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 04.01.2023 அன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.ஆர்.நடராஜன், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனாஆனந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அம்மன் கே.அர்ச்சுணன் (கோவை வடக்கு), திரு.ஏ.கே.செல்வராஜ்(மேட்டுப்பாளையம்), திரு.வி.பி.கந்தசாமி(சூலூர்) திரு.டி.கே.அமுல்கந்தசாமி(வால்பாறை), மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) டாக்டர்.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., மாநில திட்டக்குழு கூடுதல் முழுநேர உறுப்பினர் பேராசிரியர். எம்.விஜயபாஸ்கர், மாநில திட்டக்குழு உறுப்பினர்(சுகாதாரம்) டாக்டர்.ஜி.சிவராமன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் இணை இயக்குநர் டாக்டர்.ரவிக்குமார், முதன்மை திட்ட அலுவலர் மரு.கஜேந்திரன் மூர்த்தி, மண்டலக்குழுத்தலைவர் திருமதி.மீனாலோகு, மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.சாந்திமதிஅசோகன், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவீந்திரன், மாநகராட்சி சுகாதார குழுத்தலைவர் மாரிச்செல்வம், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.சந்திரா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கு.அருணா, நகராட்சி தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.(PDF 55KB)