Close

பொள்ளாச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 24/08/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து நடத்தும் சிறப்பு முகாம் 25.08.2026 அன்று பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு விழா மைய கட்டிட கலையரங்கில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், உதவி உபகரணங்கள், கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடன் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல் மற்றும் ஆதார், குடும்ப அட்டை தொடர்பான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

பொள்ளாச்சி தெற்கு வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு அரசின் நலத்திட்டங்களைப் பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 304KB)