மதுக்கரை தாலுக்கா திருமலையாம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
மதுக்கரை தாலுக்கா, திருமலையாம்பாளையம் கிராமத்தில் 09.11.2022 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். இம்முகாமில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.சௌமியாஆனந்த் இ.ஆ.ப., திருமலையாம்பாளையம் பேரூராட்சித் தலைவர் திருமதி.கவிதா உதயகுமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தி.மு.க.ஆனந்தி (எட்டிமடை), திரு.கணேசன் (அரிசிபாளையம்), திருமதி.கலாமணி (வழுக்குப்பாறை), திருமதி.கோமதி. (மாவுத்தம்பதி), திருமதி.சசிபிரியா (நாச்சிபாளையம்), துணை ஆட்சியர் சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் திரு.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (வேளாண்மை) திருமதி.தமிழ்செல்வி, வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) திரு.பண்டரிநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் திரு.தங்கமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 50KB