மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் BC, MBC/DNC மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
தமிழ்நாட்டைச் சேர்ந்த BC, MBC/DNC மாணவ, மாணவிகள் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள IIT, IIM, NIT, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு/பட்டமேற்படிப்பு பயிலும் நிலையில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருந்தால், கல்விக் கட்டணம் உள்ளிட்ட கட்டாயக் கட்டணங்களுக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
2026–27ஆம் கல்வியாண்டிற்கான Fresh மற்றும் Renewal விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி தேதிகள்:
- Renewal விண்ணப்பங்கள் – 31.10.2026
- Fresh விண்ணப்பங்கள் – 30.11.2026
- Even Semester கட்டண ரசீதுகள் – 15.01.2027
விண்ணப்பப் படிவங்களை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மற்றும் www.bcw.tn.gov.in இணையதளம் மூலம் பெறலாம்.
மத்திய/மாநில அரசின் பிற கல்வி உதவித்தொகைத் திட்டங்களில் பயனடையும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.