மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கொடிசியாவில் நடைபெற்ற அரசு விழாவில் நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 25.12.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.பி.ஆர்.நடராஜன்(கோயம்புத்தூர்), திரு.கு.சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர்.அதுல்யா மிஸ்ரா, இ.ஆ.ப., சிறப்பு செயலாக்கத்திட்டத்தின் அரசு சிறப்புச் செயலர் திரு.எஸ்.நாகராஜன் இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மரு.கா.ப.கார்த்திக்கேயன் இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையம், செயல் இயக்குநர் பி.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மேற்கு மண்டல காவல் துறைத்தலைவர் திரு.ஆர்.சுதாகர் இ.கா.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனாஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) டாக்டர்.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., மாநகராட்சி துணை மேயர் திரு.இரா.வெற்றிச்செல்வன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.(PDF 200KB)