மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி மாநாட்டை தொடங்கி வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் 23.11.2021 அன்று நடைபெற்ற விழாவில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி மாநாட்டை தொடங்கி வைத்தார்கள்.மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு. தங்கம்தென்னரசு, மாண்புமிகு ஊரக தொழிற்துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன்,மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. கா. ராமச்சந்திரன், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என். கயல்விழிசெல்வராஜ், பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஆ.ராசா, திரு.பி.ஆர்.நடராஜன், திருஅந்தியூர் கே. செல்வராஜூ, திரு.கே.சண்முக சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் (PDF 254KB)
![]() |
![]() |