மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர்,உயிர் அறக்கட்டளை இணைந்து “குட்டி காவலர்” மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைப்பதன் அடையாளமாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் (12.10.2022) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர்,உயிர் அறக்கட்டளை இணைந்து “குட்டி காவலர்” மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைப்பதன் அடையாளமாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., உயிர் அறக்கட்டளை தலைவர் திரு. சஞ்ஜய் ஜெயவர்தனவேலு, நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ். ராஜசேகரன், அறங்காவலர் திரு. ஜி. சவுந்தரராஜன், புரவலர் திரு.எஸ்.வி. பாலசுப்பிரமணியம், உறுப்பினர் திரு. எஸ். நடராஜன் ஆகியோரும் கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் திரு. வி. பாலகிருஷ்ணன், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர் திரு. வி. பத்ரி நாராயணன், இ.கா.ப.,கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் திரு. மு. பிரதாப், இ.ஆ.ப., உயிர் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் (PDF 270KB) .