மாநில கல்விக் கொள்கை தொடர்பாக மண்டல அளவிலான கருத்துக்கேட்புக் கூட்டம் மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக் குழுத்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 29/10/2022
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 29-10-2022 அன்று மாநில கல்விக் கொள்கை தொடர்பாக கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான கருத்துக்கேட்புக் கூட்டம் மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக் குழுத்தலைவர்/ புதுடெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் திரு.டி.முருகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநில கல்விக் கொள்கை உறுப்பினர் செயலர் எ.கருப்பசாமி, உறுப்பினர்கள் அருணா, ஜவஹர்நேசன், ராமானுஜம், திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் இ.ஆ.ப., முதன்மை கல்வி அலுவலர் இரா.பூபதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.(PDF 37KB)