மாவட்ட ஆட்சியர் அவர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு கேட்டு விண்ணப்பத்திருந்த பயனாளிக்கு அன்றே வீட்டினை உடனடியாக ஒதுக்கிடு செய்து ஆணை வழங்கினார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 14.03.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப. அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு கேட்டு விண்ணப்பத்திருந்த பயனாளியின், மாற்றுத்திறனாளி மகள் மற்றும் மகன் ஆகியோரது கல்வி மற்றும் சிகச்சையின் கருத்தில் கொண்டு, 14.03.2022 அன்று மனுசெய்த உடனயே மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப. அவர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தரைத்தளத்தில் வீட்டினை உடனடியாக ஒதுக்கிடு செய்து ஆணை வழங்கினார்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்களின் மாநாட்டின்போது, கோயம்புத்தூர் மாவட்டத்திற்க்கு வழங்கப்பட்ட சிறந்த மாவட்டத்திற்கான திறன், திட்டம் மற்றும் செயலாக்கத்திற்கான விருது மற்றும் ரூ.75,000க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் திருமதி. வளர்மதி அவர்களிடம் ஒப்படைத்தார்.(PDF 42.8KB)