• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

மின்னாளுமை

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி,தகவல் பரிமாற்றம், நடவடிக்கைகள், மற்றும் பல்வேறு தனித்தனியான சேவை முறைமைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.

தேசிய மின்னாளுமை திட்டம்:

மின்னனு ஊடகங்கள் வழியாக எல்லா அரசு சேவைகளையும் அளிப்பதற்கான மத்திய அரசின் முன்னெடுப்பாக தேசிய மின்னாளுமை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் மின்னாளுமையின் நீண்டகால வளர்ச்சிக்கு தேவையான அடிப்படையையும், உத்வேகத்தையும் தேசிய மின்னாளுமை திட்டம்(2003-2007)வழங்கியது. இந்த திட்டத்தின் மூலம் சரியான நிர்வாகத்தையும், அலுவலக அமைப்பையும் உருவாக்க ,தேவையான கட்டுமானங்களையும் , கொள்கைகளையும் ஏற்படுத்தி, மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த சேவை தளங்களில், பல, கொள்கை முனைப்பு திட்டங்களை நடைமுறைபடுத்தி, மக்கள் மைய ஆட்சி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய மின்னாளுமை திட்ட பார்வை:

பொது மக்களுக்கு அவர்களுடைய வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கூடியதாகவும், மக்களுக்கு எளிமையானதாகவும், வெளிப்படை தன்மையுடையதாகவும், நம்பகத்தன்மையும், திறனுள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துதல்.

மின்னாளுமைமாவட்ட திட்டம்:

மின்னாளுமை மாவட்ட திட்டம் என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. 06.12.2012 தேதியிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண்.22 படி எல்லா மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மின்னாளுமை சங்கம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக்கொண்ட மாவட்ட மின்னாளுமை சங்கம், 13.03.2013 அன்று ஏற்படுத்தப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையம்
வ.எண் சேவை துறை மையங்களின் எண்ணிக்கை
1 அரசு கேபிள் தொலைக்காட்சி 20
2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 155
3 மகளிர் திட்டம் / VPRC 37
மொத்தம் 212

வட்ட வாரியாக பொது சேவை மையங்கள்:

  1. அன்னூர் (PDF 22 KB)
  2. கோயம்புத்தூர் தெற்கு (PDF 35 KB)
  3. கோயம்புத்தூர் வடக்கு (PDF 35 KB)
  4. கிணத்துகடவு (PDF 22 KB)
  5. மதுக்கரை (PDF 21 KB)
  6. மேட்டுபாளையம் (PDF 33 KB)
  7. பேரூர் (PDF 33 KB)
  8. பொள்ளாச்சி (PDF 42 KB)
  9. சூலூர் (PDF 35 KB)
  10. வால்பாறை (PDF 26 KB)

மின்னாளுமை மாவட்ட சேவைகள்:

மின்னாளுமை மாவட்ட வருவாய்துறை சேவைகள் டிசம்பர் 2014 முதல் கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதில் வருவாய் துறையின் 5 சேவைகள் வழங்கப்படுகின்றன. அவையாவன

  1. சாதிச்சான்றிதழ்
  2. இருப்பிட சான்றிதழ் (5 அல்லது மேற்பட்ட வருடங்களுக்கு) /குடியிருப்பு சான்றிதழ்(3 அல்லது அதற்கு கீழுள்ள வருடங்களுக்கு)
  1. வருமானச் சான்றிதழ்
  2. முதல் பட்டதாரி சான்றிதழ்
  3. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்

மின்னாளுமை மாவட்ட சமூக நலத்துறை சேவைகள் மார்ச்-2015 முதல் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதில் பின்வரும் 7 சேவைகள் வழங்கப்படுகிறது.

  • அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம்
  • ஈவேரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம்
  • தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்
  • டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்
  • பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் -I
  • பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II

இணைய வழி பட்டா மாறுதல் செப்டம்பர்-2015 முதல் அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

  • தமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)
  • தமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது  (ஊரகம்)
  • தமிழ்நிலம்– கூட்டு பட்டா மாறுதல் (ஊரகம்)
  • தமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (நகர்புறம்)
  • தமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (நகர்புறம்)

மின்னாளுமை மாவட்ட சேவைகள் –சேவை கட்டணம்

  1. வருவாய்த்துறை சான்றிதழ்கள்- ரூ 60
  2. சமூக நலத்துறை திட்டங்கள்      – ரூ 120
  3. இணைய வழி பட்டா மாறுதல்   – ரூ 60
இ-சேவை
இ-சேவை திட்டத்தில் வழங்கப்படும் சேவைகள்
வ.எண் துறை துறை கட்டணங்கள் சேவை கட்டணம்
1. மின்சார வாரியம் மின் உபயோக கட்டணம் 1000வரை 15
1001 – 3000 25
3001 – 5000 40
5001 – 10000 50
10000 மேல் 60
2 பொது வினியோகத் திட்டம் புதிய குடும்ப
0 60
அட்டைகுடும்ப அட்டை திருத்தம் 0 60
குடும்ப அட்டை அச்சிட 0 60
3 தா.நா.இ.சே தமிழ்நாடு பொறியியல் சேர்கை பொது. 60
ரூ500பி.வ-தா.வ – தா.ப –ரூ250 60
4 தீயனைப்பு துறை தடையின்மை சான்றிதழ் – பல மாடி குடியிருப்பு திட்ட அனுமதி 0 120
தடையின்மை சான்றிதழ் –குடியிருப்பு திட்ட அனுமதி 0 120
பல மாடி குடியிருப்பு-தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 0 120
தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 0 120

முக்கிய இணைப்புகள் :

பொது சேவை மையங்கள்:

அலுவலர்கள் பயண்பாடு: