Close

வேளாண் அடுக்ககம் (Agri Stack) திட்டம் Grains (Grower online Registration of Agricultural Input System) வலைதளத்தில் பதிவுசெய்ய கோவை மாவட்ட விவசாயிகளுக்குஅழைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 09/03/2023

வேளாண் அடுக்ககம் (Agri Stack) திட்டமானது 01.04.2023 முதல் செயல்படுத்தப்படவுள்ளது. வேளாண் அடுக்ககம் உருவாக்குவதன் மூலம் நிலவிவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விபரம், நிலஉடைமை வாரியாக புவியியல் குறியீடுசெய்தல் மற்றும் நிலஉடைமை வாரியாக சாகுபடிபயிர் விவரம் ஆகிய அடிப்படை விவரங்களை கொண்டு (Grower online Registration of Agricultural Input System) என்ற வலைதளம் உருவாக்கப்படவுள்ளது. எனவே,கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் மேற்கண்ட ஆவணங்களை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்/உதவி வேளாண்மைஅலுவலர்/ உதவி தோட்டக்கலை அலுவலரிடம் உடனடியாக ஒப்படைத்து Grains வலைதளத்தில் தங்களின் அடிப்படை விபரங்கள் பதிவு செய்யப்பட்டதை உறுதிசெய்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப,அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.(PDF 310KB)

– பத்திரிக்கைச் செய்தி