பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட தினம் கொண்டாடப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2022கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை சாலையில் மஹாராஜா மஹாலில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின விழாவை முன்னிட்டு 07.10.2022 பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம் துவங்க முக்கிய காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருவிகே.பழனிசாமி கவுண்டர், பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருபொள்ளாச்சி நா.மகாலிங்கம், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் பத்மபூஷன் டாக்டர் கே.எல்ராவ் ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திருமு.பெ.சாமிநாதன் அவர்கள் அரசின் சார்பில்மலர்த்தூவி மரியாதை […]
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேற்றார்
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2022கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்தில் 06.10.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என் ரவி அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆப., மற்றும் பலர் கலந்து வரவேற்றனர்.
மேலும் பலஉலக முதியோர் தினத்தினை முன்னிட்டு போத்தனூர் புனித ஜோசப் முதியோர் இல்லத்தில் வயது முதிர்ந்தவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2022உலக முதியோர் தினத்தினை முன்னிட்டு போத்தனூர் புனித ஜோசப் முதியோர் இல்லத்தில் வயது முதிர்ந்தவர்களை 01.10.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். (PDF 200KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் 30.09.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆய, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 42KB)
மேலும் பலஉணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் 2022-2023 ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு (District Level Advisory Committee) கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 29.09.2022 அன்று நடைபெற்றது. (PDF 79KB)
மேலும் பல75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 75 அடி நீளமுள்ள கேக்கினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் வெட்டினார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/09/202275வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், எஸ்.என்.எஸ் கல்லுரி கலையரங்கத்தில் ஸ்கால் கிளப். ஆப் கோயம்புத்தூர் சார்பில் உலக சாதனைக்காக வடிவமைக்கப்பட்ட, இந்தியாவில் உள்ள 75 சுற்றுலா தளங்களின்புகைப்படங்கள் அடங்கிய 75 அடி நீளமுள்ள கேக்கினை 29.09.2022 அன்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. மா.மதிவேந்தன் அவர்கள் வெட்டினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பலதன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான மூன்றாவது காலாண்டுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2022கோயம்புத்தூர் மாவட்ட முகவரிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான மூன்றாவது காலாண்டுக் கூட்டம், 28.09.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 22KB)
மேலும் பலபொள்ளாச்சி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2022கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருபவர்களை பொள்ளாச்சி தலைமை மருத்துவமனையில் 28.09.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
மேலும் பலஉயர் மின்கம்பி வடங்கள் பூமிக்கு அடியில் பதிக்கும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2022கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம் பகுதியில் 28.092022 அன்று உயர் மின்கம்பி வடங்கள் பூமிக்கு அடியில் பதிக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, புகைப்படங்களின் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/09/2022உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில், 27.092022 அன்று வாவ் தமிழ்நாடு போட்டியில் இடம்பெற்ற 100 சிறந்த புகைப்படங்களின் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., திறந்து வைத்து பார்வையிட்டார். (PDF 35KB)
மேலும் பல