Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

ஸ்டார்ட் RUN. ஸ்டாப் DRUGS – போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் செய்தியை வலியுறுத்தவும், “ஸ்டார்ட் RUN. ஸ்டாப் DRUGS – போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026” மாவட்டத் தலைநகரங்களில் 26.06.2026 அன்று காலை 5.30 மணிக்கு கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட உள்ளது. (PDF  226KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 223KB)

மேலும் பல

அமைச்சர்கள் முன்னிலையில் 248 மருத்துவ மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மரு. கே.ஜி. அருண்ராஜ் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி. சம்பத்குமார் அவர்கள் மற்றும் மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க. விக்னேஷ் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நடைபெற்ற 5-வது பட்டமளிப்பு விழாவில் 100 மருத்துவ மாணவர்களுக்கும், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 55-வது பட்டமளிப்பு விழாவில் 148 மருத்துவ […]

மேலும் பல

வங்கித்துறை செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் குழுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலக  கூட்டரங்கில், வங்கித்துறை செயல்பாடுகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான ஆய்வுக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 18.06.2026 அன்று நடைபெற்றது. (PDF 226KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மரக்கன்றுகள் நடவு பணிகள் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேய்ச்சல் நிலத்தில், தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.06.2026) நடைபெற்றது. (PDF 232KB)

மேலும் பல

பள்ளிகளில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின அனுசரிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026

ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து (தனியார் மற்றும் அரசு) பள்ளிகளிலும், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை அனுசரிக்கும் பொருட்டு, அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழியை எடுக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.  (PDF 59KB)

மேலும் பல

சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவன விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026

சிறந்த சமூக  சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கும் பொருட்டு கருத்துருக்களை அனுப்புவதற்கான விதிமுறைகள்: தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல்    வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள்,பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை,அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து  பணியாற்றும் சமூக சேவகர்  மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் […]

மேலும் பல

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026

துணிவு மற்றும் வீரசாகச செயல்களுக்கான தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லாவிருது ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. துணிச்சல் மற்றும் வீரசாகச செயல்புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம். (PDF 56KB)

மேலும் பல

பொது விநியோக சேவைகள் குறைதீர் முகாம் ஜூன் 13 அன்று நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஜூன்-2026 மாதத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் 13.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. (PDF 226KB)

மேலும் பல

அன்னூர் வட்டத்தில் வருவாய் தீர்வாய முகாம் – 16.06.2026 முதல் 18.06.2026 வரை

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், 1435-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோயம்புத்தூர் அவர்கள் தலைமையில் எதிர்வரும் 16.06.2026, 17.06.2026 மற்றும் 18.06.2026 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது.  (PDF 225KB)

மேலும் பல