வால்பாறையில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், இன்று (25.08.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 67KB)
மேலும் பலபொள்ளாச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து நடத்தும் சிறப்பு முகாம் 25.08.2026 அன்று பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு விழா மைய கட்டிட கலையரங்கில் நடைபெற உள்ளது. இம்முகாமில் UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், உதவி உபகரணங்கள், கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடன் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல் மற்றும் ஆதார், குடும்ப […]
மேலும் பல26.08.2026 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுபானக் கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026மீலாடி நபி தினத்தை முன்னிட்டு, 26.08.2026 (புதன்கிழமை) அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மதுபான உரிமத்தளங்களும் Dry Day ஆக அறிவிக்கப்பட்டு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் விதிமுறைகளை மீறி மதுபானம் விற்பனை செய்தல், சட்டவிரோதமாக பதுக்கி வைத்தல் அல்லது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம், 1937-ன் கீழ் கடுமையான […]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், இன்று (24.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 56KB)
மேலும் பலகோயம்புத்தூரில் TNPSC குரூப் 2/2A இலவச பயிற்சி வகுப்புகள்
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2026ஆம் ஆண்டிற்கான குரூப் 2/2A தேர்வு அறிவிப்பை 11.08.2026 அன்று வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 2 பதவிகளுக்கு 41 பணியிடங்களும், குரூப் 2A பதவிகளுக்கு 780 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் 09.09.2026 ஆகும். இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 01.09.2026 அன்று காலை 10.00 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்க உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி, நூலக […]
மேலும் பலகோயம்புத்தூரில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (24.08.2026) மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகத்தின் சார்பில், எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 65KB)
மேலும் பலகோயம்புத்தூரில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 1,266 பேருக்கு பணி நியமன ஆணைகள்
வெளியிடப்பட்ட நாள்: 22/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரியில் உள்ள இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (22.08.2026) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் மற்றும் மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் […]
மேலும் பலகோயம்புத்தூரில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி சேர்க்கை முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026கோயம்புத்தூர் மாவட்ட த்தில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு உயர் கல்வி சேர்க்கை முகாம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 327KB)
மேலும் பலநாக்பூர் தம்ம சக்கர விழா: தமிழக பௌத்தர்களுக்கு ரூ.5,000 வரை மானியம்
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புவதற்காக, ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 2026ஆம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பௌத்தர்கள், விண்ணப்பப் படிவத்தை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 15.11.2026க்குள் […]
மேலும் பலATMA திட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சியர் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) திட்டத்தில் காலியாக உள்ள வட்டார தொழில்நுட்ப மேலாளர் (BTM) மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் (ATM) பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தகுதியும் அனுபவமும் கொண்ட பணிநியமன முகமைகளிடமிருந்து (Recruitment Agency) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான முகமைகள் தங்களது விவரங்கள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகளை 27.08.2026க்குள் திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், தடாகம் ரோடு, […]
மேலும் பல