தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு 490 வீட்டுமனைப் பட்டாக்களை மாண்புமிகு அமைச்சர் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 29/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் இன்று (29.08.2026), மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு முதற்கட்டமாக 490 வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். (PDF 227KB)
மேலும் பலகோவையில் “தேசத்திற்கான சமரசம் 3.0” முகாம் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026மாண்புமிகு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை சமரசத்தின் மூலம் தீர்த்து வைக்கும் நோக்கில், “தேசத்திற்கான சமரசம் 3.0” என்ற தலைப்பில் நாடு தழுவிய சமரச தீர்வு முகாம் 01.10.2026 முதல் 31.12.2026 வரை மாவட்ட சமரச தீர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையத்தின் அறிவுறுத்தலின்படியும், மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி. ஜெ. ஸ்ரீதேவி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கோயம்புத்தூர் மாவட்ட சமரச தீர்வு மையங்கள் மற்றும் […]
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (28.08.2026) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 221KB)
மேலும் பலகோவை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026கோயம்புத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026–2027ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை (Spot Admission) கால அவகாசம் மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 31.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் 52 வயது வரை சேரலாம். விண்ணப்பிப்பதற்காக நேரில் வருபவர்களுக்கு நிலையத்தின் உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. சிறப்புக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. (PDF 239KB)
மேலும் பலமக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027: கோவை மாவட்டத்தில் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகள் தீவிரம்
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டமாக, வீடுகள் பட்டியலிடல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு (HLO) பணிகள் கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் 01.08.2026 முதல் 30.08.2026 வரை கணக்கெடுப்பாளர்களால் வீடுகளுக்கு நேரில் சென்று, டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தங்களது வீடுகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான சரியான தகவல்களை எவ்வித தயக்கமும் இன்றி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கணக்கெடுப்புப் பணிகளில் ஏதேனும் வீடுகள் அல்லது பகுதிகள் விடுபட்டிருந்தால், […]
மேலும் பலஇந்தியத் திறன் போட்டிகள் 2027 – பதிவு தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறவுள்ள உலகத் திறன் போட்டிகள் 2026-ல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களைத் தேர்வு செய்வதற்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவுகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு தொடர்ந்து இந்தியத் திறன் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்தியத் திறன் போட்டியில் தமிழ்நாடு ஒட்டுமொத்த தரவரிசையில் இரண்டாம் இடம் பெற்றதுடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 போட்டியாளர்கள் உலகத் திறன் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 முதல் 25 […]
மேலும் பலகோயம்புத்தூரில் செப்.11 அன்று ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.09.2026 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. (PDF 398KB)
மேலும் பலபிச்சனூரில் செப்.09 அன்று மக்கள் தொடர்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், பிச்சனூர் கிராமம், மகாளியம்மன் கோவில் மண்டபத்தில் வரும் 09.09.2026 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, 27.08.2026 அன்று காலை 11.00 மணிக்கு, வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) தலைமையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கப்பட்டு, 09.09.2026 அன்று நடைபெறும் மக்கள் […]
மேலும் பலதமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2026 – விண்ணப்பங்கள் வரவேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சுற்றுலாத் தொழில் முனைவோர் மற்றும் தங்குமிட நிறுவனங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சிறந்த சாகச சுற்றுலா மற்றும் முகாமிடுதல் தளம் உள்ளிட்ட […]
மேலும் பலபோட்டித் தேர்வு பயிற்றுநர்கள் தேவை – விண்ணப்பிக்க அழைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் TNPSC, TNUSRB, TRB, TET, SSC, RRB, IBPS உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகளை நடத்த தகுதியும் அனுபவமும் உள்ள பயிற்றுநர்கள் தேவைப்படுகின்றனர். பயிற்றுநர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 மதிப்பூதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவரக் குறிப்புடன் 07.09.2026க்குள் துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி […]
மேலும் பல