Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

கோவை வடக்கு வட்டத்தில் வருவாய் தீர்வாய முகாம் – 16.06.2026 முதல் 25.06.2026 வரை

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம், வடக்கு வட்டம், 1435ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் பெரியநாயக்கன்பாளையம் உள்வட்டம் 16.06.2026 அன்றும், துடியலூர் உள்வட்டம் 17.06.2026 அன்றும், கவுண்டம்பாளையம் உள்வட்டம் 18.06.2026 அன்றும், சரவணம்பட்டி உள்வட்டம் 19.06.2026 அன்றும், கணபதி உள்வட்டம் 23.06.2026 அன்றும், சங்கனூர் உள்வட்டம் 24.06.2026 அன்றும், அனுப்பர்பாளையம் உள்வட்டம் 25.06.2026 அன்றும் நடைபெறவுள்ளது. (PDF […]

மேலும் பல

வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாண்புமிகு அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வி.சம்பத் குமார் அவர்கள் தலைமையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறத்து தொடர்புடைய துறைச்சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 74KB)

மேலும் பல

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்  திரு.வி.சம்பத் குமார் அவர்கள் தலைமையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (PDF 56KB)

மேலும் பல

கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசுப் பொருட்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சி. மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசுப் பொருட்காட்சியினை மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வி.சம்பத் குமார் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து, பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு, அரசுத்துறைகளின் சார்பில் 459 பயனாளிகளுக்கு ரூ.3.92 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 258KB)

மேலும் பல

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28 அன்று நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 2026-ம் ஆண்டில் 28.06.2026-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போலியோ சொட்டு மருந்தானது போலியோ நோயை அறவே ஒழிப்பதற்காக வழங்கப்படுகிறது. (PDF 269KB)

மேலும் பல

கோவை தெற்கு வட்டத்தில் வருவாய் தீர்வாய முகாம் – 16.06.2026 முதல் 18.06.2026 வரை

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

கோயம்புத்தூர் தெற்கு வட்டத்தில் உள்ள கிராமங்களின் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் 16.06.2026 முதல் 18.06.2026 வரை விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமை நீங்கலாக காலை 10.00 மணி முதல் வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (நகர்புற நிலவரி) அவர்களால் கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. (PDF 219KB)

மேலும் பல

கோவையில் கால்நடைகளுக்கு 12 இலக்கு டிஜிட்டல் அடையாள எண் பதிவு

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வளர்க்கப்பட்டு வரும் கால்நடைகளுக்கு 12 இலக்கு அடையாள வில்லை எண் பதிவு செய்து, அதன் முழுவிவரம் மற்றும் உரிமையாளர் விவரம் மின்னணு தகவல் மூலம் பதிவேற்றம் செய்திட தேசிய மின்னணு கால்நடை இயக்கம் (National Digital Livestock Mission – NDLM ) எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. (PDF 225KB)

மேலும் பல

கோவையில் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

கோயமுத்தூர் ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி கனவு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.06.2026) துவக்கி வைத்து, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் சார்பில் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு அரங்கங்களை பார்வையிட்டார். (PDF 264KB)

மேலும் பல

கிணத்துக்கடவு வட்டத்தில் வருவாய் தீர்வாயம் முகாம் – 16.06.2026 முதல் 18.06.2026 வரை

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம்,கிணத்துக்கடவு வட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் கோயம்புத்தூர், அவர்கள் தலைமையில் 16.06.2026 முதல் 18.06.2026 வரையிலான நாட்களில் காலை 10.00 மணிக்கு தொடங்கி கீழ்க்கண்ட நாட்களில் நடைபெறவுள்ளது. (PDF 223KB)

மேலும் பல

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 222KB)

மேலும் பல