Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாவட்ட ஆட்சியர் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மையத்தை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் உயர்கல்வியின் சேர்வதற்கான வழிகாட்டுதல்களைப் பெறும் வகையில் உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 218KB)

மேலும் பல

இயற்கை விவசாயம் மற்றும் சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த கருத்தரங்கு

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியம், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேளாண்மைத் துறை, மாநில விரிவாக்கத் திட்டத்திற்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் சார்பில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடலுடன் இயற்கை விவசாயம் மற்றும் சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  (PDF 228KB)

மேலும் பல

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கடன் திட்டங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம் ) மற்றும் கல்வி கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. (PDF 234KB)

மேலும் பல

கோயம்புத்தூர் மாவட்ட சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

தமிழ்நாடு அரசால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நல மாணவர்/மாணவியருக்காக இரண்டு கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் பட்டப்படிப்பு, முதுகலை, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர தகுதியுடையவர்கள். தங்கும் வசதி மற்றும் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படும். (PDF 301KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF  221KB)    

மேலும் பல

SSC CGL 2026 தேர்வு அறிவிப்பு வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வு–2026க்கான விரிவான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. (PDF  414KB)

மேலும் பல

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – 2026

வெளியிடப்பட்ட நாள்: 06/06/2026

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும்  பொருட்டு, “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று  15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, ரூபாய் 1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.        அதன்படி, 2026-ஆம் ஆண்டிற்கான “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” எதிர்வரும்  15.08.2026  அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.  (PDF […]

மேலும் பல

பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 06/06/2026

கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்   திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 235KB)

மேலும் பல

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் சமூகநீதி விடுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

கோயமுத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், சொக்காம்பாளையத்தில் செயல்பட்டு வரும் சமூகநீதி விடுதிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி.சம்பத்குமார் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 55KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் 100% 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 73 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், 2025 – 2026ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 73 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க. கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார். (PDF 145KB)

மேலும் பல