Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026

கோயம்புத்தூர்  மாவட்டத்தில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், தேசிய  குடற்புழு  நீக்க  நாள்  முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், தொடங்கி வைத்தார். (PDF 69KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், இன்று (10.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.  (PDF 221KB)

மேலும் பல

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 10 அன்று தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 08/08/2026

உலக மக்களின் தொகையில் 24% பேர் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகையில் 1% பேர் திறந்த வெளியில் மலம் கழித்தால் கூட அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படலாம். தொற்றுடைய மண் மூலம், மண்ணில் விளையும் பொருட்கள் மூலம், மண்ணில் கை கால்கள் படுவதன் மூலம் மனிதர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசால் வருடம் இருமுறை நாடு தழுவிய குடற்புழு நீக்கும் திட்டம் […]

மேலும் பல

தொழில்முனைவு மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 17 முதல் தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME) துறையின் கீழ், செயல்பட்டு வரும்  தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), அகமதாபாத்தில் உள்ள  Entrepreneurship Development Institute of India (EDII)  உடன் இணைந்து நடத்தும் ஓராண்டு தொழில் முனைவோர்  மற்றும் புத்தாக்க (Entrepreneurship & Innovation) சான்றிதழ் படிப்பிற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 291KB)  

மேலும் பல

12-வது தேசிய கைத்தறி தினம்: சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில், கைத்தறி துறையின் சார்பில், 12-வது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.வே.சுரேந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி  வைத்தார். (PDF 64KB)    

மேலும் பல

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் ஆகஸ்ட் 8-ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும்

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் குடிமைப்பொருள் தனிவட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் – 2026 மாதத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் வருகின்ற 08.08.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. மேற்படி […]

மேலும் பல

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 100% e-KYC கைரேகைப் பதிவை நிறைவு செய்ய சிறப்பு முகாம்கள்

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கோயம்புத்தூர் […]

மேலும் பல

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘உயர்வுக்குப்படி’ உயர்கல்வி வழிகாட்டி சிறப்பு முகாம் ஆகஸ்ட் 7 முதல் தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத மாணாக்கர்களை உயர்கல்வியில் சேர்க்கும் பொருட்டு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் உயர்வுக்குப்படி சிறப்பு முகாம் எதிர்வரும் 07.08.2026 முதல் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 63KB)

மேலும் பல

உயர்கல்விக்கான கல்வி நிதி உதவித்தொகையை 20 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில், 2025- 26 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த உயர்கல்விக்கு கல்வி நிதி உதவித்தொகை 20 மாணாக்கர்களுக்கு தனியார் பங்களிப்புடன் ரூ.1.5 இலட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பவனர் இ.ஆ.ப., அவர்கள், வழங்கினார். (PDF 55KB)

மேலும் பல

கோயம்புத்தூரில் மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில், மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.08.2026) நடைபெற்றது. (PDF 54KB)

மேலும் பல