Close

ஊடக வெளியீடுகள்

Filter:
gdp123

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.12.2022 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2022

26.12.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 210KB)  

மேலும் பல
sports minister1

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கொடிசியாவில் நடைபெற்ற அரசு விழாவில் நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 25/12/2022

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 25.12.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.பி.ஆர்.நடராஜன்(கோயம்புத்தூர்), திரு.கு.சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, அரசு கூடுதல் […]

மேலும் பல
DEC 21C- PHOTO5

நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 21/12/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 21.12.2022 அன்று மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2023-24ஆம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார். இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.சௌமியாஆனந்த், இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பி.ஆர்.ஜி.அருண்குமார்(கவுண்டம்பாளையம்), திரு.ஏ.கே.செல்வராஜ்(மேட்டுப்பாளையம்), திரு.வி.பி.கந்தாசமி (சூலூர்) திரு.டி.கே.அமுல்கந்தசாமி(வால்பாறை), மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் […]

மேலும் பல
msme meeting

சூலூர் வட்டம், கிட்டாம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாட்டு பணிகளுக்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 21/12/2022

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், கிட்டாம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாட்டு பணிகளுக்கு 21.12.2022 அன்று மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ஜி.திருமுருகன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கூட்டுறவு தொழிற்பேட்டையின் நிர்வாக அலுவலர்/தொழில் கூட்டுறவு […]

மேலும் பல
19122022GDP

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.12.2022 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2022

19.12.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.(PDF 210KB)  

மேலும் பல
Agri19122022

சிறு தானிய பயிர் ஊக்குவிக்கும் பிரச்சார வாகனங்களையும், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டவிளக்க சிறப்பு பிரச்சார வாகனத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 19.12.2022 அன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் ஊக்குவிக்கும் வண்ணம் பிரச்சார வாகனங்களையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டவிளக்க சிறப்பு பிரச்சார வாகனத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் கா.முத்துலட்சுமி, வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) தமிழ்செல்வி, […]

மேலும் பல
treee plantation

மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தனர்

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2022

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ பிள்ளையார்புரம்‌ பகுதியில்‌ “குறிஞ்சிவனம்‌” மரம்‌ கன்றுகள்‌ நடும்‌ பணியினை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப. மாநகராட்சி ஆணையாளர்‌ திரு .மு.பிரதாப்‌ இ.ஆ.ப., ஆகியோர்‌ தொடங்கி வைத்தார்கள்‌ . உடன்‌ ஆனைமலை புலிகள்‌ காப்பக கள்‌ இயக்குனர்‌ மற்றும்‌ வன பாதுகாவலர்‌ திரு.எஸ்‌.ராமசுப்பிரமணியன்‌ இ.வ.ப., மாவட்ட வன அலுவலர்‌ திரு.அசோக்‌ குமார்‌ இ.வப. சலீம்‌ அலி பறவைகள்‌ சரணாலய முதுநிலை அறிவியலாளர்‌ டாக்டர்‌.பிரமோத்‌ வனசரகர்‌ மதுக்கரை திருமதி.சந்தியா ஆகியோர்‌ உள்ளனர்‌.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை – வைட்டமின் “ஏ” திரவம் வழங்கும் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2022

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் வைட்டமின் “ஏ” திரவம் வழங்கும் முகாம் 19.12.22 முதல் 24.12.22 வரை நடைபெறவுள்ளது. (PDF 380KB)  

மேலும் பல
one day flight trip

வானமே எல்லை – ஒரு நாள் விமான பயணம்

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2022

சென்னையில் இருந்து கோவைக்கு முதன்முறையாக ஒரு நாள் விமான பயணமாக 17.12.2022 அன்று வந்த அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் திருநங்கைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் இ.ஆ.ப. வரவேற்றனர். வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) பூமா மற்றும் ரெயின் டிராப்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். (PDF 238KB)  

மேலும் பல

மாவட்ட அளவிலான கலைவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2022

கோயம்புத்தூர் மாவட்டம்,கிக்கானி மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் 17.12.2022 அன்று பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.பூபதி, மாவட்ட கல்விஅலுவலர்கள் பாண்டியராஜசேகரன்(இடைநிலை), புனிதா(தொடக்கநிலை), வள்ளியம்மாள் (பொள்ளாச்சி), கீதா(தனியார் பள்ளிகள்) கிக்கானி பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி, மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் […]

மேலும் பல