பந்தயசாலையில் உள்ள நியாயவிலைக்கடைகள் மற்றும் ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2022கோயம்புத்தூர் மாவட்டம், பந்தயசாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக அமுதம் அங்காடி , தாமஸ் பார்க் பகுதியில் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சிந்தாமணி நியாய விலைக்கடை, ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி, டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள டாக்டர். அம்பேத்கர் அரசினர் கல்லூரி மாணவர் விடுதி ஆகியவற்றை 15.12.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அலுவலர் […]
மேலும் பலநேர்காணலுக்கு அழைக்கபட்ட பல் மருத்துவர் விண்ணப்பதாரர்கள் பட்டியல் நேர்காணல் நடைபெறும் நாள் 16.12.2022
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2022நேர்காணலுக்கு அழைக்கபட்ட பல் மருத்துவர் விண்ணப்பதாரர்கள் பட்டியல் நேர்காணல் நடைபெறும் நாள் 16.12.2022, காலை 10.00 மணி (PDF 366KB)
மேலும் பலநேர் காணலுக்கு அழைக்கபட்ட பல் மருத்துவ உதவியாளர் விண்ணப்பதாரர்கள் பட்டியல் நேர் காணல் நடைபெறும் நாள் 16.12.2022
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2022நேர் காணலுக்கு அழைக்கபட்ட பல் மருத்துவ உதவியாளர் விண்ணப்பதாரர்கள் பட்டியல் நேர் காணல் நடைபெறும் நாள் 16.12.2022 காலை 10.00 மணி (PDF 248KB)
மேலும் பலநேர் காணலுக்கு அழைக்கபட்ட பல் மருத்துவர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் நாள் 16.12.2022 கோயம்புத்தூர் அரசு மருத்துவ கல்லூரி, அவினாசி சாலை, கோயம்புத்தூர்.
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2022நேர் காணலுக்கு அழைக்கபட்ட பல் மருத்துவர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் நாள் 16.12.2022, காலை 10.00 மணி, கலையரங்கம், கோயம்புத்தூர் அரசு மருத்துவ கல்லூரி, அவினாசி சாலை, கோயம்புத்தூர் (PDF 328 KB).
மேலும் பலகோயம்புத்துார் மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தில் செயல்பட்டுவரும் பல்வேறுத் திட்டங்களின் மூலம் பொள்ளாச்சி வால்பாறை மேட்டுப்பாளையம் மற்றும் கூடலூர் கவுண்டம்பாளையம் ஆகிய நான்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு MAPPING செய்யப்பட உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 14/12/2022மேற்கண்ட MAPPING செய்வதற்கு விருப்பமுள்ள நிறுவனங்கள் தங்களது விலைப்புள்ளிகளை உரிய ஆவணங்களுடன் இணைத்து 26.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் பந்தைய சாலையில் உள்ள துணை இயக்குநர் சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 230KB)
மேலும் பலகிணத்துக்கடவு வட்டம், சொக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 14/12/2022கிணத்துக்கடவு வட்டம், சொக்கனூர் கிராமத்தில் 14.12.2022 அன்று நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் பொள்ளாச்சி சார்ஆட்சியர் செல்வி.பிரியங்கா இ.ஆ.ப., கிணத்துகடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் துணைத்தலைவர் பாலகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபு(எ) திருநாவுகரசு (சொக்கனூர்), செந்தில்குமார்(சொலவம்பாளையம்), சுந்தர்ராஜ்(அரசம்பாளையம்), ரத்தினசாமி(கோதவாடி) ருக்குமணிசிதம்பரம் (ஆண்டிபாளையம்), ராம்குமார் (பொட்டையாண்டிபுரம்பு) தர்மராஜ் (குதிரையாலம்பாளையம்) மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், […]
மேலும் பலகோயம்புத்தூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய அரசு நடத்தும் போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 13/12/2022மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), பாஸ்போர்ட் அலுவலகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை முதல் கட்ட தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 12-ம் ஆண்டு கல்வித் தகுதித் தேர்வுகளுக்கு 06.12.2022 முதல் 04.01.2023 வரை https://ssc.nic.in என்ற வலைத்தள முகவரியில் விண்ணபிக்கலாம். முதல் கட்ட தேர்வு பிப்ரவரி இறுதியில் நடைபெறும்.(PDF 430KB)
மேலும் பலகலைஇலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு இளம் பாரதி விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2022பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் விழாவில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு நூல்களையும், மகாகவி பாரதியாரின் பாடல்களின் இசைப்பேழையினை வெளியிட்டு, கலைஇலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு இளம் பாரதி விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 44KB)
மேலும் பலதிருவள்ளுவர் திருநாளில் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2022தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு திருவள்ளுவர் திருநாளில் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, இது தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் தகுதியான நபர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 16.12.2022க்குள் விண்ணப்பிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 208KB)
மேலும் பலமாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு ஹோட்டலில் புதுப்பிக்கப்பட்ட உணவகத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2022கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரம், தமிழ்நாடு ஹோட்டலில் புதுப்பிக்கப்பட்ட உணவகத்தினை 12.12.2022 அன்று மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர், திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், மத்திய மண்டலக்குழு தலைவர் மீனாலோகு, உதவி சுற்றுலா அலுவலர் துர்காதேவி, தமிழ்நாடு ஹோட்டல் மண்டல மேலாளர் […]
மேலும் பல