இந்திய குடிமைப்பணிகள் முதனிலை தேர்வு நடைபெறுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் குடிமைப்பணிகள் தேர்வு பார்வையாளர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 03/06/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இந்திய குடிமைப் பணிகள் முதனிலை தேர்வு நடைபெறுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் குடிமைப் பணிகள் தேர்வு பார்வையாளர் திரு.சிவசண்முக ராஜா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் 03.06.2022 அன்று நடைபெற்றது .
மேலும் பலஇரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது முதிர்வடைந்த பயனாளிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2022மாண்புமிகு முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது முதிர்வடைந்த பயனாளிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள் -பத்திரிகைச் செய்தி (PDF 38KB)
மேலும் பலஅனைத்து தொழில் முனைவோர்களும் தொழில் நிறுவனங்களும் தொழில் துவங்க மற்றும் விரிவாக்க ஒப்புதல்களை பெற ஒரு முனை இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2022குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் / நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பல்துறை உரிமங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பெறுவதற்கு WWW.TNSWP.COM/DIGIGOV என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள் -பத்திரிகைச் செய்தி (PDF 34KB)
மேலும் பலவருவாய் தீர்வாய முகாம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 01.06.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2022கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1431ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் 250 பயனாளிகளுக்கு ரூ.37.16 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 01.06.2022 அன்று வழங்கினார்கள். (PDF 36KB)
மேலும் பலHCL-Tech Bee நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாம் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 31/05/2022HCL-Tech Bee நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாம் கோவை ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 03.06.2022 முதல் 05.06.2022 வரை நடைபெற உள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்ட மாணவர்கள் பங்கு பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள் -பத்திரிகைச் செய்தி (PDF 151KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் 31.05.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 31/05/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 31.05.2022 அன்று நடைபெற்றது. (PDF 202KB)
மேலும் பலஅகில இந்திய குடிமைப்பணிகள்(UPSC) தேர்வில் தேர்ச்சி பெற்ற கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்து
வெளியிடப்பட்ட நாள்: 31/05/2022அகில இந்திய குடிமைப்பணிகள் (UPSC) தேர்வில் தேர்ச்சி பெற்ற கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 31.05.2022 அன்று புத்தகம் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேலும் பலஉலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 31/05/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 31.05.2022 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் பலபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற வீராங்கனைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்து
வெளியிடப்பட்ட நாள்: 30/05/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவி வி.திவ்யஸ்ரீ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்களிடம் 30.05.2022 அன்று வாழ்த்து பெற்றார்.
மேலும் பலஇந்திய தொழில் கூட்டமைப்புக்களுடனான ஆலோசனை கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 30/05/2022இந்திய தொழில் கூட்டமைப்புக்களுடனான (CII) ஆலோசனை கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் 30.05.2022 அன்று கோயம்புத்தூர் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. (PDF 392KB)
மேலும் பல