Close

ஊடக வெளியீடுகள்

Filter:
CM Exhibition inauguration

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொல்பொருட்கள் மாதிரிகள் மற்றும் அரசின் ஓராண்டு அரும்பணிகளின் தொகுப்பு ஓவிய கண்காட்சியினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் மைதானத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் மாதிரி கண்காட்சி மற்றும் தமிழ்நாடு அரசு கடந்த ஓராண்டில் ஆற்றிய அரும்பணிகளின் தொகுப்பு ஓவிய வடிவங்களின் கண்காட்சி ஆகியவற்றை 19.05.2022 அன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மேலும் பல
Minister Aliyar Water Release

மாண்புமிகு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் ஆழியாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீரினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கோயம்புத்தூர் ஆனைமலை வட்டம் ஆழியாறு அணையிலிருந்து பழைய ஐந்து வாய்க்கால்களின் மூலம் முதல் போக பாசனத்திற்கு தண்ணீரினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். (PDF 33KB)

மேலும் பல
Honble Vice President visit

மாண்புமிகு இந்திய குடியரசுத் துணை தலைவர் கோவை வருகை

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2022

மாண்புமிகு இந்திய குடியரசுத் துணை தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகைபுரிந்ததையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 16.05.2022 அன்று விமான நிலையத்தில் வரவேற்றார்.

மேலும் பல
Surprise Inspection at Uzhavar sandhai

மாவட்ட ஆட்சித்தலைவர் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2022

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 15.05.2022 அன்று நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பல
Saplings under Sustainable Green Cover

விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன-பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2022

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3430 விவசாயிகளுக்கு ரூ.51.45 இலட்சம் மதிப்பில் 3,43,000 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 37KB)

மேலும் பல
Health Secretary inspection at CMC

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2022

கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் திரு. டாகடர். ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப அவர்கள் 13.05.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.நிர்மளா அவர்கள் கலந்து கொண்டனர். (PDF 37KB)

மேலும் பல
Honble Governor visit Bharathiyar university

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் பாரதியார் பல்கலைகழக மாணவர்களுடன் கலந்துரையாடினார்

வெளியிடப்பட்ட நாள்: 12/05/2022

மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் கோவை மாவட்ட பாரதியார் பல்கலைகழகத்தில் பல்வேறு துறையை சார்ந்த மாணவர்களுடன் 12.05.2022 அன்று கலந்துரையாடினார். மேலும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மகாகவி சுப்ரமணிய பாரதியார் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் பல
Review meeting of Social Welfare and Women Empowerment Department

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 11/05/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் திருமதி. ஏ.எஸ்.குமரி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் 11.05.2022 அன்று நடைபெற்றது. (PDF 42KB)

மேலும் பல
Mango Surprise Raid

மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி மாம்பழங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 11/05/2022

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் அவர்களின் உத்தரவின்படியும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் கோயம்புத்தூர் மாநகர பகுதிகளில் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் மரு.கு.தமிழ்செல்வன் அவர்களது தலைமையில் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (PDF 38KB)

மேலும் பல
Burundi Ambassador welcome by District Collector

மாண்புமிகு புருண்டி குடியரசு நாட்டின் தூதரை மாவட்ட ஆட்சித்தலைவர் புத்தகம் வழங்கி வரவேற்றார்

வெளியிடப்பட்ட நாள்: 11/05/2022

கோயம்புத்தூர் மாவட்டத்திற்க்கு வருகைதந்த புருண்டி குடியரசு நாட்டின் மாண்புமிகு தூதர் திருமதி. ஸ்டெல்லா புதிரிகன்யா அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 11.05.2022 அன்று புத்தகம் வழங்கி வரவேற்றார்.

மேலும் பல