ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

எதிர்வரும் 31.03.2026 செவ்வாய்கிழமை மகாவீர் ஜெயந்தி தினத்தன்று மதுபானக் கடைகள் மூட உத்திரவிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள்/பார்கள் (FL1) பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில்(FL2) செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில்(FL3) செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் (FL3A), சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள்(FL3AA) மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை (FL11) உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் எதிர்வரும் 31.03.2026(செவ்வாய்கிழமை)மகாவீர் ஜெயந்தி(MahavirJayanti )தினத்தன்று (Dry day) மூட உத்திரவிடப்பட்டுள்ளது. (PDF 403KB)

படங்கள் ஏதும்  இல்லை

இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு 2027

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு 2027 பற்றிய செய்தி வெளியீடு  (PDF 793KB)

படங்கள் ஏதும்  இல்லை

காவல் துறையில் “ஆர்டர்லி சிஸ்டம்” பற்றிய செய்தி வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

காவல் துறையில் “ஆர்டர்லி சிஸ்டம்” பற்றிய செய்தி வெளியீட. (PDF 822KB)

ELECTION AWARNESS FLAG OFF VECHILE 3

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறித்த குறும்படம் ஒளிபரப்பு செய்யும் பணியினை கொடி அசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டார் .

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026- ஐ முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறித்த குறும்படம் ஒளிபரப்பு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டார் . (PDF 26KB)

ELECTION AWARENESS - BIKE RALLY 01

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் 2026யினை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் மகளிர்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 56KB)

EVM RANDOMISATION NEWS 3

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதற்கட்ட சமவாய்ப்புக்கு உட்படுத்துதல் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-னை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதற்கட்ட சமவாய்ப்புக்கு உட்படுத்துதல் (First Randomisation) மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF  416KB)  

COLLECTOR POLING BOOTH AND VECHILE INSPECTION NEWS 4

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குப்பதிவு மையங்களில் அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026

கோயம்புத்தூர் மாவட்டம் (117- கவுண்டம்பாளையம்) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் (119 – தொண்டாமுத்துார்) சட்டமன்ற தொகுதிகுட்பட்ட செல்வபுரம் சிருஷ்டி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 61KB)  

General Observers Meeting 05

தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் ஆகியோர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தல் -2026 – னை முன்னிட்டு, தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் ஆகியோர்களுடனான ஆய்வு  கூட்டம் நடைபெற்றது. (PDF 241KB)

படங்கள் ஏதும்  இல்லை

அத்தியாவசிய பணிகள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்காளர்களுக்கு அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடு

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

இந்தியத்தேர்தல் ஆணையத்தால், சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பத்து (10) சட்டமன்ற தொகுதிகளில் அத்தியாவசிய பணிகள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்காளர்களுக்கு எளிதாக வாக்களிக்கும் பொருட்டு வாக்காளர்களின் விருப்பத்தினைப்பெற ஏதுவாக ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (NODAL OFFICER) நியமனம் செய்து அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (PDF 394KB)

ELECTION AWARENESS (NIRMALA COLLEGE) EVENT 1

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

கோயம்புத்தூர் மாவட்டம், சுங்கம் நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்டமன்ற பொது தேர்தல் -2026ஐ முன்னிட்டு,  மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து   வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகள்  நடைபெற்றது. (PDF 285 KB)