ஊடக வெளியீடுகள்
மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் 2026யினை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் மகளிர்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 56KB)
மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதற்கட்ட சமவாய்ப்புக்கு உட்படுத்துதல் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-னை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதற்கட்ட சமவாய்ப்புக்கு உட்படுத்துதல் (First Randomisation) மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 416KB)
மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குப்பதிவு மையங்களில் அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026கோயம்புத்தூர் மாவட்டம் (117- கவுண்டம்பாளையம்) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் (119 – தொண்டாமுத்துார்) சட்டமன்ற தொகுதிகுட்பட்ட செல்வபுரம் சிருஷ்டி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 61KB)
தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் ஆகியோர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தல் -2026 – னை முன்னிட்டு, தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் ஆகியோர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 241KB)
அத்தியாவசிய பணிகள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்காளர்களுக்கு அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடு
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026இந்தியத்தேர்தல் ஆணையத்தால், சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பத்து (10) சட்டமன்ற தொகுதிகளில் அத்தியாவசிய பணிகள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்காளர்களுக்கு எளிதாக வாக்களிக்கும் பொருட்டு வாக்காளர்களின் விருப்பத்தினைப்பெற ஏதுவாக ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (NODAL OFFICER) நியமனம் செய்து அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (PDF 394KB)
மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026கோயம்புத்தூர் மாவட்டம், சுங்கம் நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்டமன்ற பொது தேர்தல் -2026ஐ முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது. (PDF 285 KB)
சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் தலைமையில் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், சூலூர் சட்டமன்ற தொகுதி (116), சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி (121) ஆகிய தொகுதிகளின் தேர்தல் பொது பார்வையாளர் திரு.கிருஷ்ணா ஆதித்யா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 64KB)
திருமண மண்டப உரிமையாளர்கள், பேனர் மற்றும் ஃப்ளெக்ஸ் ஆபரேட்டர்கள், அச்சக உரிமையாளர்கள் ஆகியோரின் சங்கங்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026திருமண மண்டப உரிமையாளர்கள், பேனர் பிளக்ஸ் , அச்சகங்கள் ஆகிய சங்கத்தினர்கள் பின்பற்ற வேண்டிய சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 நடத்தை விதிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்/ மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 59KB)
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026இத்தேர்தலில் அதிக அளவிலான வாக்கு சாவடிகள் பயன்படுத்தப்படவுள்ள நிலையில் முன்னாள் படைவீரர்களின் தேவையும் பாதுகாப்பு பணிக்கு அதிகரித்துள்ளது. எனவே கோயம்புத்தூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் இத்தேசம் நலன் காக்கும் இப்பணிக்கு முன்னாள் படைவீரர்கள் அனைவரும் இத்தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விருப்பத்துடன் பணிபுரிந்திட வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது. முன்னாள் படைவீரர்களின் நேர்மை, கடமையாற்றல் மற்றும் பணியில் ஈடுபாடு இவைகளை பாராட்டியும் அங்கீகரித்தும் இவ்வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனை முன்னாள் படைவீரர்கள் முழுமனதுடன் ஏற்று இப்பணியில் […]
மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85+ வயது வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு வசதி – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026இந்தியத் தேர்தல் ஆணையத்தால், சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பத்து (10) சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்(40 % மேற்பட்ட) மற்றும் 85+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தினைத் தவிர்க்கும் பொருட்டு, அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நேர்வில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தினைப் பெற ஏதுவாக தங்களது இல்லங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth level Officer), […]